Hospitalலயே எந்த நேரமும் கிடகிறதால இன்னும் 6 மாசத்துக்கு பொடியன் எங்கயும் போக ஏலாது...so இருக்கிற photoச வச்சு தான் சமாளிக்கணும்...என்ன தான் இருந்தாலும்..அது சொந்த ஊரா தான் இருந்தாலும் ...அதுக்காக சொந்த வீட்ட மறக்க ஏலுமா ??...காலடில opportunity இருக்கிற நேரம் பொடியன் ஏன் ஊர் ஊரா சுத்தணும் ????....பழக்கமில்லாத ஊர் !!..கூடிட்டு போக ஒரு guideum சிக்காத நேரம் இப்பிடியாக பொடியன் மனச தேற்றி கொண்டு இருக்கிற நேரம் தான் உள்ள இருந்து அம்மா கத்தினவா....அடேய் இங்க வந்து பாரு என்னது எண்டு....என்ட அம்மா எனக்கு ஒரு spotter மாதிரி ...எதாவது வடிவா (என்னைய மாதிரி )..இல்லாட்டி பயங்கரமா.(உங்கள மாதிரி )..இப்ப ஏன் இந்த முறைப்பு...?????????....கதைக்கு வாறன்...என்ட அம்மா எனக்கு ஒரு spotter மாதிரி !!!...எதாவது கண்ட வந்து போட்டோ எடு என்பா...நிரம்ப தடவ எனக்கு பிடிச்ச நிரம்ப photos அப்பிடி எடுத்தது தான்....இந்த முறையும் அப்பிடி தான்....சிங்க வயசாச்சு..இன்னும் என்ட உடுப்ப நான் தோய்கிறதில்லை (மாட்டு வயசு எல்லாம் இப்ப old trend..புதுசா சிங்கம்,சுறா வயசு எண்டு வச்சு கொள்ளனுமண்ணே..)..அடியே Panni ..ராசாத்தி உனக்கு தாண்டி இத சொல்றன்...எதிர்காலத்தில பொடியன்ட மனசு கோணாம நடந்து கொள்ளுடி...:P...anyways இனி ஊர் பக்கம் போற ஆக்கள் எல்லாரும் உடுப்பு போட முதல் ஒருக்க நல்ல எல்லா இடமும் Check பண்ணுங்க சாரே...எங்க எங்க எல்லாம் கூடு கட்டி இருக்குதுகள் தெரியுமா....:(...சீ போங்க..!
கதைக்கு வாறன்..அப்பிடி அம்மா அரக்க பறக்க கூபிட்டு காட்டினது வேறொண்டும் இல்லை ஒரு சிலந்தி...உடம்பு முழுக்க விஷம் அண்ணே...!!!..ஊரில ரொம்ப அதிகமாம்..தென்னை மரதில இருந்து கடிக்குமாம்...சொல்வாங்க..நான் அத கேட்டு பயந்ததே இல்லை...ஏனெண்டா எனக்கு தான் மரமேற தெரியாதே..ஆமா ரொம்ப முக்கியம் இது இப்ப..!!!...கதைக்கு வாடா...வேறொண்டும் இல்லை...so அந்த சிலந்திய தோத்து போன IIFA functionku வந்த கத்ரினா கைப் ,பிரியங்கா சோப்ரா..மாதிரி மேலயும் கீழையும்..தலைகீழ..குப்பற எண்டு பல வித anglesla படம் எடுத்தன்...நான் சொன்னத இப்பிடி நீங்க தப்பு தப்பா நினைப்பீங்க எண்டு தெரிஞ்சு இருந்தா நான் சொல்லியே இருக்க மாட்டன் தெரியுமா..?...!!!..என்ன தான் நான் ஒரு இயற்கை உணர்வாளனா இருந்தாலும் என்ட வம்சத்தில கை வைக்க வந்த சிலந்திய சும்மா விடுவனா...??..வேற என்னங்க செய்யுறது..பாவம் தான்...என்ன தான் செய்யுறது வேற..சரி அத விடுங்க..அதுண்ட ஆத்மா சாந்தியாகட்டும்..!!
அபிடியே அத படம் எடுக்க தூக்கின camerava கீழ வைக்க மனசில்லை பாருங்கோ...வீட்ட சுத்தி சுத்தி படம் எடுத்தன் பிறகு...குச்சி ஐஸ்கிரீம் காரன் வரும் வரைக்கும்...அவனையும் சேர்த்து ஒரு படம் எடுத்த பிறகு தானன்னே கீழ வச்சனான்..சரி ஏன் வீண் பேச்சு உங்களுக்கும் ஆயிரம் வேலை இருக்கும்..எனக்கும் ராவணா பாக்க டைம் ஆகுது...படத்த பாத்திட்டு கிளம்புங்கண்ணே...வரட்டுமா..











5 comments:
Nice Collection... Keep it up :)
Good collection - love the dogs and the spider! Tell me how to translate this page pl.
nice
you really went to punguduthivu. the story you told is really different and beautiful. you can send it to any short story competition. you r really clever because u balance ur studies and hobbies. thu thu thu naavooru padappokuthu.
puvana acca.
aww!!! that was awesome anna!!!
had sooo much fun reading it too :D
aama,unga veetu hall ku ullayum maram valakireengala!!! illa kannu kutty da background la therinjuthu, athu thaan kettan :P
keep up the great work anna
-Vaany-
Post a Comment