" வணக்கம் சொல்றான் பொடியன்...திண்ணைக்கு வந்த நீங்க கால நீட்டி நிம்மதியா இருந்து..பாக்கு வெத்திலை சாப்பிட்டு கதை சொலிட்டு போகலாம்...படிச்சிட்டு போகலாம்..ஆனா நான் கொஞ்சம் ஒருமாதிரி ..இங்க போட்டிருக்க படங்களில Black border போட்டு Watermark பண்ணின படம் எல்லாமே Copyrights Reserved!!.. ...அதாகப்பட்டது..பொடியன கேக்காம Right Click பண்ணி Save as குடுத்து வேற எங்கயும் அந்த Photova அனுமதியில்லாம பாவிக்கிற ஆக்களுக்கு..எங்க ஊரில புகையிலை வித்த கதிர்காம முருகன்ட நிலைமை தான் ஏற்படும் என்டத முதலே சொல்லி வைக்கிறன்..மற்ற படி நான் ரொம்ப நல்லவனுங்க...:) "

Friday, June 18, 2010

பொடியனும் ஊர் வீடும்....

பொடியன் ஒரு முடிவு பண்ணிட்டான்...இனி மேல் வாயாடியா இருக்க கூடாது....வீட்டுக்கு நல்ல புள்ளையா இருக்கனும்..முக்கியமா திண்ணை பக்கம் போய் குந்தி இருந்து போற வார ஆக்களோட வெட்டி நியாயம் கதைக்க கூடாது எண்டு..(ஐயோ நம்புங்க சத்தியமா உங்கள தான் Refer பண்றன்.!!!.)....பல நாள் பொடியன் காணாம போனதுக்கு இது காரணம் எண்டா அது தப்பு...!...அது சும்மா...கண்மணியை இமை போல காக்க போனனான்..இவளவும் தான் இப்ப சொல்லாம்..! Guess பண்றவங்க பண்ணிக்குங்க..
Hospitalலயே எந்த நேரமும் கிடகிறதால இன்னும் 6 மாசத்துக்கு பொடியன் எங்கயும் போக ஏலாது...so இருக்கிற photoச வச்சு தான் சமாளிக்கணும்...என்ன தான் இருந்தாலும்..அது சொந்த ஊரா தான் இருந்தாலும் ...அதுக்காக சொந்த வீட்ட மறக்க ஏலுமா ??...காலடில opportunity இருக்கிற நேரம் பொடியன் ஏன் ஊர் ஊரா சுத்தணும் ????....பழக்கமில்லாத ஊர் !!..கூடிட்டு போக ஒரு guideum சிக்காத நேரம் இப்பிடியாக பொடியன் மனச தேற்றி கொண்டு இருக்கிற நேரம் தான் உள்ள இருந்து அம்மா கத்தினவா....அடேய் இங்க வந்து பாரு என்னது எண்டு....என்ட அம்மா எனக்கு ஒரு spotter மாதிரி ...எதாவது வடிவா (என்னைய மாதிரி )..இல்லாட்டி பயங்கரமா.(உங்கள மாதிரி )..இப்ப ஏன் இந்த முறைப்பு...?????????....கதைக்கு வாறன்...என்ட அம்மா எனக்கு ஒரு spotter மாதிரி !!!...எதாவது கண்ட வந்து போட்டோ எடு என்பா...நிரம்ப தடவ எனக்கு பிடிச்ச நிரம்ப photos அப்பிடி எடுத்தது தான்....இந்த முறையும் அப்பிடி தான்....சிங்க வயசாச்சு..இன்னும் என்ட உடுப்ப நான் தோய்கிறதில்லை (மாட்டு வயசு எல்லாம் இப்ப old trend..புதுசா சிங்கம்,சுறா வயசு எண்டு வச்சு கொள்ளனுமண்ணே..)..அடியே Panni ..ராசாத்தி உனக்கு தாண்டி இத சொல்றன்...எதிர்காலத்தில பொடியன்ட மனசு கோணாம நடந்து கொள்ளுடி...:P...anyways இனி ஊர் பக்கம் போற ஆக்கள் எல்லாரும் உடுப்பு போட முதல் ஒருக்க நல்ல எல்லா இடமும் Check பண்ணுங்க சாரே...எங்க எங்க எல்லாம் கூடு கட்டி இருக்குதுகள் தெரியுமா....:(...சீ போங்க..!
கதைக்கு வாறன்..அப்பிடி அம்மா அரக்க பறக்க கூபிட்டு காட்டினது வேறொண்டும் இல்லை ஒரு சிலந்தி...உடம்பு முழுக்க விஷம் அண்ணே...!!!..ஊரில ரொம்ப அதிகமாம்..தென்னை மரதில இருந்து கடிக்குமாம்...சொல்வாங்க..நான் அத கேட்டு பயந்ததே இல்லை...ஏனெண்டா எனக்கு தான் மரமேற தெரியாதே..ஆமா ரொம்ப முக்கியம் இது இப்ப..!!!...கதைக்கு வாடா...வேறொண்டும் இல்லை...so அந்த சிலந்திய தோத்து போன IIFA functionku வந்த கத்ரினா கைப் ,பிரியங்கா சோப்ரா..மாதிரி மேலயும் கீழையும்..தலைகீழ..குப்பற எண்டு பல வித anglesla படம் எடுத்தன்...நான் சொன்னத இப்பிடி நீங்க தப்பு தப்பா நினைப்பீங்க எண்டு தெரிஞ்சு இருந்தா நான் சொல்லியே இருக்க மாட்டன் தெரியுமா..?...!!!..என்ன தான் நான் ஒரு இயற்கை உணர்வாளனா இருந்தாலும் என்ட வம்சத்தில கை வைக்க வந்த சிலந்திய சும்மா விடுவனா...??..வேற என்னங்க செய்யுறது..பாவம் தான்...என்ன தான் செய்யுறது வேற..சரி அத விடுங்க..அதுண்ட ஆத்மா சாந்தியாகட்டும்..!!
அபிடியே அத படம் எடுக்க தூக்கின camerava கீழ வைக்க மனசில்லை பாருங்கோ...வீட்ட சுத்தி சுத்தி படம் எடுத்தன் பிறகு...குச்சி ஐஸ்கிரீம் காரன் வரும் வரைக்கும்...அவனையும் சேர்த்து ஒரு படம் எடுத்த பிறகு தானன்னே கீழ வச்சனான்..சரி ஏன் வீண் பேச்சு உங்களுக்கும் ஆயிரம் வேலை இருக்கும்..எனக்கும் ராவணா பாக்க டைம் ஆகுது...படத்த பாத்திட்டு கிளம்புங்கண்ணே...வரட்டுமா..
சாண வண்டு..உருண்டையோட சேர்த்து தூக்கி தூக்கி நல்ல lightingla வச்சாலும்..கொய்யால வண்டு திருப்பி உருட்டி கொண்டு நிழலுக்குள்ள போகுது..என்னால முடிஞ்சது இவளவும் தான்...ஆள விடுங்க..
எங்க வீட்டு கிளுவமர படலை....
அடை மழைல நனைஞ்சு சளி பிடிச்சு வந்து Hallila நிண்ட எங்க வீட்டு கன்னு குட்டி..
குச்சி ஐஸ் கிரீம் கவர் இல்லாதது 1௦ /= போட்டது 2௦ /=...அப்ப. ..கவர் 1௦ /= .!!.கூட்டி கழிச்சு பாத்தா கணக்கு சரியாய் வருதுல்ல...;)..பாருங்க நீங்க இதையும் தப்பா தான் நினைக்குறீங்க..போங்க நீங்க சரியில்லை...!
எங்க ஊரு கிழவி...பனை கருப்பா வயசா இருக்கு...கிழவி வயசா கருப்பா இருக்குது..
கடி நாயும் சொறி நாய் குட்டிகளும்..
மரத்தயே 1௦ தடவ சுத்தி சுத்தி வந்தும் நல்ல anglela ஒரு snap கிடைகல...
அந்தி சாயும் போது ...
எங்க வீட்டு பனை மரங்கள்...
இது தாங்க அந்த சிலந்தி ...சாக முதல் இப்பிடி தாங்க அது கம்பீரமா நிண்டிச்சு...எத்தின தடவ கடிகிறதுகாக பாஞ்சிச்சு தெரியுமா...கோவக்கார பிள்ளை...சின்ன வயசில இப்பிடி பொத்தெண்டு போட்டானே...வீரம் மட்டும் போதாது அண்ணே ..விவேகமும் வேணும்..எங்க வலை பின்னுறது எண்டு ஒரு விவஸ்தை வேணாம்..??
கார்த்திகேசு வாத்தியார் வீடு. ..அட எங்க வீடு தான்...