கேளுங்களேன் பொடியன் பருந்து பிடிக்க போன கதைய...கண்ணகை அம்மன் கோவில் திருவிழாக்கு போன பொடியன் திருவிழா முடிஞ்சு என்ன செய்றதேன்டே தெரியாம திண்ணைல இருந்து வானத்தையே வெறிச்சு பாத்து கொண்டு இருந்த நேரம் தானண்ணே அந்த பருந்து என்ட தலைக்கு மேல என்னய ஒரு மாதிரி பாத்து கொண்டே போய்ச்சு..அப்ப தாங்க வெட்டியா இருக்கிறத விட பருந்தயாவது படம் பிடிக்கலாம் எண்டு ஒண்டுக்கும் உதவாத ஒரு ஐடியா பொடியன் மனசில உண்டாகிச்சு.
தனியா போகவும் தெரியா ,பழக்கமில்லாத ஊருங்க..So யாரவது சிக்க மாட்டினமா எண்டு வெயிட் பண்ணி கொண்டிருந்த பொடியனுக்கு ரெண்டு சின்ன ஸ்கூல் போற இளசுகள் தன Set ஆகிச்சு..Thats okay,job comes before prestige, எண்டு திடபடுத்தி கொண்டு வெளிக்கிட்டமுங்க மூண்டு பேரும் ஒரு சைக்கிளில..எங்க அண்ணே போறது - ஒரு பெடி,..எங்கயாவது வெளிநாட்டு கொக்கு நிக்கிற இடத்துக்கு போவம் எண்டு சொல்ல அவங்க கொண்டு போய் விட்ட இடம் தாங்க அந்த குளக்கரை.
பாதமளவுக்கு தான் தண்ணி..என்ட அண்ணன் ஒருக்கா சொன்னவர் இங்க தான் நீந்தி பழகினான் எண்டு, அத யோசிச்சு பாத்தன்!..சரி விடுங்க ...அண்ணே கொக்கு பாக்க போன நேரம் 5.30 Pm.ஒரு பட்சி கூட இல்லைங்க..So சும்மா ஏன் வருவம் எண்டு ரெண்டு மூண்டு Sunset போட்டோ,அபிடியே நானும் ஒரு ஸ்டில்,எடுத்திட்டு சரி நடந்திடலாம் எண்டு ,நம்பினா நம்புங்க,குளத்துக்கு நடுவால பொடியன் நடந்தான் பாருங்க..சூப்பரா இருந்திச்சு..அத மட்டும் முதலே நான் கண்டிருந்தா சத்தியமா அப்பிடி கால் வச்சிருக மாட்டனுங்க தண்ணிக்குள்ள...எத கண்டா??..பொறுங்கோ ..அத கண்டது ரெண்டு நாளுக்கு பிறகு...Now lets look at the first day photos..Please Click on the photos to see the larger views..








இந்த தண்ணிக்குள்ள தான் அது இருக்குதண்ணே!!!
இனி ரெண்டாவது நாள்
அண்டைக்கு இரவு பயங்கர மழை பாருங்கோ...பொடியனுக்கு சந்தோசம்..நாளைக்கு குளம் நிரம்பியிருக்கும்..பருந்து Shooting sure !!!..விடிய காலம அதாவது 10.30 AM for me..வீட்ட வேலி அடைக்க வந்த "விச்சுழி" என்கிற மரியதாஸ் அண்ணய Friend பிடிச்சு பொடியன் அவரோட சைக்கிளில வெளிகிட்டான்..But this time my plan was ஒருக்கா அங்கால வேற சில இடங்கல சுத்தி கொண்டு குளத்துக்கு போவம் எண்டது தான்..
so கண்ணகை அம்மன் கொவிலடியால அப்பிடியே Beach பக்கமா Navy Camp அடிச்ச இடம் மட்டும் போன பொடியன் நாச்சியம்மை கொவிலடில ஒரு Stop போட்டான்..காரணம் அந்த தென்னை மரம்..அண்ணே நம்புங்கோ ...நம்ம ஊரில ஒரு Maldive scene கண்டன் ...அத உடனயே Click பன்னினன் ...பிறகு கோவிலுக்குள்ள ஒரு சுத்து,நாச்சியம்மையவது அவளுக்கு நல்ல புத்திய குடுக்கணும் எண்டு..8-),..கும்பிடு போட்டிட்டு குளகரைக்கு வந்து சேர்ந்தம் வல்லன் பக்கமா..



குளகரைல சைக்கிள் விட்ட பற்றைகுள்ள இருந்து என்னைய வரவேற்றது வேற எதுவும் இல்லை பாருங்கோ..."பாம்பு செட்டைங்க"....நாக பாம்பு தோலுரிச்சு கழட்டி போட இடத்தில தான் என்ட Second day ஆரம்பமாகிச்சு பாருங்கோ...பொடியன் துணிஞ்சவன்..அபிடியே பாம்பு செட்டைய சுருட்டி ரெண்டு பெரிய இலைல பார்சல் கட்டி பாக்கெட்ல போட்டவன்..வீட்ட போனா அம்மாட ஊழி தாண்டவத்த பாக்க நேரிடுமே என்ட ஒரே காரணத்துக்காக தாங்க அத திருப்பி கீழ எறிஞ்சிட்டு வந்தனான்..அநியாயம்..Campus பொடியனுகளுக்கு Scene காட்ட வேண்டிய chance அம்மா பற்றிய Terroறால spoil ஆகிட்டு..Thats okay..But திரும்பி பாத்தனுங்க குளத்த...சும்மா சொல்ல கூடாது அண்ணே..சொர்கமுங்க..!!!!
பாருங்களேன் நீங்களே...










மொத்ததில ரெண்டாவது நாள் நல்ல வேட்டை பாருங்கோ..ரொம்ப திருப்தியா வீட்ட போனான் பொடியன்...
இனி மூண்டாவது நாள்...இதான் Last Day ..So திண்ணைலயே இருங்க please...
மூண்டாவது நாள் திரும்ப Bettera Photo எடுப்பம் எண்டு கனவோட இருந்த பொடியன்ட கனவு கரைஞ்சு போனது இரவிருந்து காலம 10 மணி வரை பெய்த மழையால..சரி மழை விட்டிட்டு சும்மா போய் பாப்பம் எண்டு ,வீட்ட வேலை பாக்க வார பொடியன்ட மோட்டார் பைக்ல வெளிக்கிடன் பாருங்கோ...நினைச்ச மாதிரியே குளக்கரை வெறும் கரையா இருந்திச்சு...பெரிசா பறவையும் இல்லை...அங்க ஒண்டு இங்க ஒண்டு தான்..ஒரே ஒரு பருந்து மட்டும் வட்டமிட்டு கொண்டு scene காட்டிட்டு பறந்து போச்சு..2 hours wait பண்ணின எனக்கு ஏமாத்தம் தான்..But suddenly வந்தது ஒரு Thought..இவளவு பருந்து இந்த இடதில இருக்கே....இதுகள் எங்க இருந்து வரும் எண்டு...வழிபோக்கன் மாதிரி சுத்தி திரியிற என்னை அந்த ஐடியா feed பணியது...What else !!..பறந்து போனா பருந்தின்ட திசைலயே follow பண்ணினான் பொடியன்....
அப்ப தாங்க அந்த கொடூரத்த கண்ணால கண்டன்..பருந்து திண்டிட்டு போட்டு போனா ஒரு உயிரினம்....சேர்ந்து வந்தவர் தான் சொன்னார்..அண்ணே அது நீர் பாம்பு..இந்த குளத்தில இருக்குதுங்க எண்டு ...எனக்கு ஒரு Tank வெடிச்சு ஊதுற மாதிரியே ஒரு Feeling...சுமாரா ஒரு மீட்டர் இருக்குமுங்க....ஐயோ இந்த குளதிலையா இறங்கி நடந்தன்முதல் நாள்..எல்லாமே அவளுக்கு Design போட்ட இறகு ஒண்டு பொறுக்க போனதிண்ட effect..அம்மன் தான் காப்பாதினா..!!..

தொடர்ந்து நடந்து கடசில பருந்து இருந்த இடத்துக்கு போனன்..ஒரு பாழடைஞ்ச வீடு பாருங்கோ..சுத்தி வர பெரிய பனை மர தோப்பு...அங்க இருக்கினம் எல்லாரும்..ஒரு 7 பருந்துகள் ,1 கழுகு..சந்தோசம்..அவையும் குழம்பி பறக்க வெளிகிட்டினம்...




10 comments:
Nice :) Kaiyila irrukirathu white ah theriyuthu. aana athu neenga sonna special irahu endu evanuku theriyum?!
come on cam..im still having it..ill show it to you...PANNI !!!
சூப்பரா இருக்கு சாரே...
அருமை
அருமை பொடியா,
கொஞ்சநேரத்தில எங்களையும் உன்ர ஊருக்கு ஒருக்கால் கதையையும் படத்தையும் காட்டி கூட்டிக்கொண்டு போட்டாய்.
வாழ்த்துக்கள் நல்லா இருந்திச்சு மச்சான்.
நன்றி நண்பர்கள் நிமல் ,கோகுல்,பாலமுரளி ஆகியோருக்கு..மீண்டும் திண்ணை பக்கம் வாருங்கோ..
very nice bhagi.. unka rasanai nalla iruku
Nice blog and lovely pics. Especially the local maldive scene. Keep going.
Best wishes....
அருமையான படங்கள் நண்பரே! படத்தையும் படமெடுத்த கணங்களையும் காட்ச்சிப்படுத்திய விதம் அருமை! தொடரட்டும்!
Superb machan..keep doing it..
Post a Comment