Read my complete Travel Report in This site -
Liptons Seat ( Click on the Link )
Haputalaeல எதோ ஒரு degree குளிர்ல நடுநடுங்கி அங்க நிண்டவன் எல்லாம் என்ட முகத்த பாத்து அப்பன் உனக்கு சரி வராது ராசா ,பாரு முகமே Blue கலர் ஆகிட்டு,plsda போய்டு எண்டு சொலுற அளவுக்கு கஷ்டப்பட்டு பாடு பட்டு எடுத்த போட்டோ அண்ணே இது..மலை மலையா ஏறி இறங்கி location பாத்து கேமரா செட் பண்ணி எடுத்திட்டு வீட்ட வந்து பாத்தா அட cha இதுக்கா இவளவு பாடு எண்டு முகமே சப்பளிஞ்சு போட்டுதண்ணே ..ஆமா நான் இப்ப என்ன சொலுறன்...ஏன் அண்ணே ஏதோ ஒரு படத்தில பாத்த மாதிரி எல்லாத்துக்கு ஒரு மெசேஜ் எதிர் பார்க்கிறீங்க???..இப்ப தானே exams முடிஞ்சது...மூளை பழைய நிலைமைக்கு வர நாள் எடுக்கும் தானே?..
..............
மலைக்காடுகள்,இளங்காற்று,தூவானம்,இலைகளின் சலசலப்பு,மண் மணம்,இதமும் குளிரும் ,
எனக்கோ அவ்விடம் புல்லரிப்பு..,
அதோ தூரத்தில் ஒரு மலைப் பாதையில் ஒருத்தி...,
தேயிலை கூடையோடு,வெறும் காலோடு..
அவளுக்கு அவ்விடம் செல்லரிப்பு..

அரசுகள் கை விட்ட போதும் ,
மலை முகடுகளும்,வானமும் ,மேக கூட்டங்களும் ,பனித் துளிகளும் பாதுகாப்பிற்காய்...

வளைந்தும் நெளிந்தும் கீழும் மேலுமாய் திக்கு திசை தெரியாத ஒற்றையடி பாதையாய் ,இயற்கையாய் எம் வாழ்க்கை ..

இதயம் துடித்தது ,மலையோர இளங் காற்றில் அம் மலர் ஆடிய சந்தத்துக்கு ஏற்ப..
அடித்துக் கூறுவேன்!!..,
அவளை மலருக்கு ஒப்பிடுவதில் தப்பில்லை..

பச்சையாய் அழகாய் ஒரு மாலை நேரத்து தேயிலை தோட்டத்து பாதை,
பல பல காலடி தடங்கள்,
சிறிது நேரத்தின் முன் தான் கூடை கூடையாய் கோடிகள் நிறுக்கப்பட்டு,
சர்க்கரையும் வெறும் தேநீரும் மட்டும் வாங்க காசு வாங்கி சென்ற
மானுடர்கள் நிண்ட இடம்..
அன்றிரவு அவ்விடத்தில் எம் BBQ,
மனிதம்..!!
இன்னொரு காலை பொழுது...சோம்பல் முறிக்கும் முகத்தை வரவேற்கும் ..இரவு முழுதும் பனியில் குளித்த
செடிகள் ..
ஏறிய மேடும் , இறங்க வேண்டிய பள்ளமும்!! ...மேடும் பள்ளமும் கிட்ட தட்ட ஒன்று தான்...பாக்கிறவன் பாக்கிற விதத்தில பாக்கணும்..இங்க பாருடா வேலை வட்டி இல்லாம வீட்டில வெட்டியா இருக்கிற பேய்குட்டி பொடியன் கருத்து சொலுறான்.போடா டேய் போ..
நீல வானம்,தேயிலை தோட்டம்,கற்சுவர்,வளைந்து,
முடிந்த பாதை...
காலை நேரம்,குளிர் காற்று --- , வெற்றிலை வாய்,திருநீற்று பட்டை,சிவந்த குங்கும பொட்டு,சுருங்கிய முகத்து தோல்,மூக்குத்தி ,வளையல் ,அடகு வைத்த தோடு, வெறும் கால்,கிழிந்து தைத்த சீலை,வெறும் வயிற்றை இறுக்கி கட்டிய கயிறு,பின்னால் கூடை,புன்னகைத்த முகம்...அவளுக்காக காத்திருக்கும் தேயிலை செடிகள்...
மெல்லப் பேசுக...!!!..முதலாளிகள்
கத கத அறையில் தூக்கம்..!

சரி படம் பாத்து time waste ஆகினது போதும் !!..போங்க போய் வேலைய பாருங்க..
பிற்குறிப்பு : இங்கே கவிதை சொல்றன் எண்டு வம்புக்கு சொன்ன கருத்துகள் யாவும் கற்பனையே...யாரும் இதெல்லாத்தையும் தங்கட தலைல தூக்கி போட்டு கொண்டு பொடியன்ட கழுத்த வந்து பிடிக்க கூடாது.. ஆமா சொல்லிபுட்டன்..!!..கோவணம் காஞ்சு ரெடியா தான் இருக்கு...!
பேந்து சந்திக்கிறன்.. !!!!